உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய கடந்த 3 சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து நாளை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து ரகசியம் காத்து வருவதால், தினம் தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. 

மேலும் கொரோனா அச்சுறுத்தலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த 3 சீசன்களிலும் வார இறுதி நாட்களில் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்திப்பார் கமல்ஹாசன். அப்போது ஒரு சில பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிய வருகிறது. அவ்வாறு நடந்தால் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியே கசிய வாய்ப்பே இல்லை.

இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் அவர்களுடன் பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளும். இந்த முறை கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் என்பதை வைத்தே நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா, இல்லையா என்பதை பார்வையாளர்கள் தீர்மானித்துவிடுவார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. பங்கேற்பாளர்களுக்கென லிவ்விங் ரூம், டைனிங் ஹால், கழிவறை வசதி, படுக்கை அறை, கார்டன், கிச்சன் என அட்டகாசமாக உள்ளது பிக்பாஸ் சீசன் 4 வீடு. ஒவ்வொரு முறையும் பொருத்தப்பட்டிருக்கும் அகம் டிவி வாயிலாக உள்ளே நடப்பதை கமல் ஹாசன் காண்பார். அதை அரங்கில் இருக்கும் ரசிகர்களுக்கும் தெரிவிப்பார். இந்த முறை எந்த மாதிரி சர்ப்ரைஸுடன் பிக்பாஸ் நடைபெறுகிறது என்பதை பார்த்து ரசிப்போம். 

இனி 105 நாட்களுக்கு மக்கள் பிக்பாஸ் வீட்டில் ஒருவராக இருப்பார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. தொடர்ந்து வெளியாகும் ப்ரொமோக்களே போட்டியின் சுவாரஸ்யத்தை எடுத்துக்கூறும். மேலும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் கமல் ஹாசனின் ஆடல், பாடல் ஏதாவது இருக்குமா என்ற ஆவலிலும் உள்ளனர் தொலைக்காட்சி பிரியர்கள். 

 

bigg boss tamil season 4 house photos vijay tv bigg boss tamil season 4 house photos vijay tv bigg boss tamil season 4 house photos vijay tv bigg boss tamil season 4 house photos vijay tv bigg boss tamil season 4 house photos vijay tv