கொரோனா காரணமாக அனைத்து ஷூட்டிங்குகளும் சினிமா,சீரியல்,டிவி நிகழ்ச்சிகள் என்று எதுவும் நடைபெறாமல் உள்ளது.இதனால் பல சேனல்களில் தங்களது ஹிட் சீரியல்,நிகழ்ச்சிகள்,படங்கள் போன்றவற்றை ஒளிபரப்பி வருகின்றனர்.

TN Govt Gives Permission For TV Show Serial Shoot

மார்ச் 19 முதல் ஷூட்டிங்குகள் எதுவும் நடைபெறாததால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் ஷூட்டிங்கை தொடங்க உத்தரவு வழங்ககோரியும் தமிழக அரசிடம் சின்னத்திரையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

TN Govt Gives Permission For TV Show Serial Shoot

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை ஷூட்டிங்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.அதில் 20 பேருக்கு மேல் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் இருக்கக்கூடாது,நடிகர்,நடிகைகளை தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்,பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது,வெளியில் ஷூட்டிங் நடந்தால் வாகனம்,ஷூட்டிங் நடக்கும் இடம் ஆகியவற்றை கிருமி நாசினி மூலம் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழக அரசு வைத்துள்ளனர்.

TN Govt Gives Permission For TV Show Serial Shoot