தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சியின்  வெற்றிகரமான மெகா தொடர் பூவே பூச்சூடவா. பிரபல தொலைக்காட்சி பிரபலங்களான ரேஷ்மா முரளிதரன், மதன் பாண்டியன், கார்த்திக் வாசு, கிருத்திகா ஆகியோர் பூவே பூச்சூடவா தொடரில்  முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மீனாகுமாரி, உமா பத்மநாபன், கௌசல்யா செந்தாமரை ,சந்தோஷ், ஷான்தினி பிரகாஷ் ,திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் .தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வருந்தினி பரிணயம்  கிட்டத்தட்ட 1100 எபிசோடுகளை கடந்து நான்கு வருட காலமாக வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி வருகிறது. அந்த மெகா தொடரின் ரீமேக்காக தமிழில் தயாராகி தற்போது வெற்றி நடை போட்டு வரும் மெகா தொடர் தான் பூவே பூச்சூடவா.

பூவே பூச்சூடவா தொடரின் கதாநாயகியான சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்து வருகிறார். சமீபத்தில் ரேஷ்மா முரளிதரன் இந்த மெகா தொடரை விட்டு விலகுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. பலரும் இந்த மெகா தொடரில் மற்றொரு இளம் நடிகை ரேஷ்மா முரளிதரனுக்கு பதிலாக நடிக்க உள்ளதாகவும் செய்திகளை பரப்பி வந்தனர். இந்நிலையில் இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ரேஷ்மா மனம் திறந்து பேசியுள்ளார். 

தனது சமூக வலைதளபக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ள நடிகை ரேஷ்மா யாரும் எந்த வதந்திகளையும் நம்பவேண்டாம் பரப்பவும் வேண்டாம், தான் பூவே பூச்சூடவா தொடரில் இருந்து விலகவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பல நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

நடிகை ரேஷ்மா முரளிதரன் முன்னதாக நடிகை ரேஷ்மா முதலிடம் இத்தொடரில் உடன் நடித்து வந்த நடிகர் மதன் பாண்டியனை  காதலிப்பதாக தெரிவித்திருந்தார். விரைவில் இவர்களது காதல் திருமணமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

popular tamil serial actress reshma opens up for the rumors on poovepoochudava