பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் காதலில் விழுந்தேன் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். சிறந்த நடிகரான இவர் சீரான பாடகரும் கூட. அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். 

சென்ற லாக்டவுனில் தனது மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது மகளின் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார் நகுல். அதில், தனது மகளுக்கு அகிரா என்று பெயர் சூட்டிய விஷயம் குறித்து பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் நகுல் தன் மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். வீட்டிலேயே எளிமையாக நடத்தியுள்ளார். இதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மகள் பிறந்து 100 நாட்கள் ஆவதை தொடர்ந்து இந்த விழாவை நடத்தியுள்ளார் நகுல். மகளின் பெயர் அகிரா என்பதை ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நகுல் நடிப்பில் உருவாகி வரும் படம் எரியும் கண்ணாடி. சச்சின் தேவ் இயக்கி வரும் இந்த படத்தில் சுனைனா ஹீரோயினாக நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் மேனன் மற்றும் ரேவதி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ஆவலாக உள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார் நகுல். 

சமீபத்தில் குழந்தைக்கு தாலாட்டு பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் நகுல். இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்தது. படப்பிடிப்பு ஏதும் இல்லாத நகுல் தற்போது சைக்கிளிங் செய்து வருகிறார்.