நாகர்கோவில் காசி வழக்கில் அதிரடி திருப்பமாக, செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை போலீசார் அதிரடியாக மீட்டு உள்ளனர். 

நாகர்கோவில் காசி சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடக்கத்தில், காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது.

முக்கியமாக, காசியை மிஞ்சும் அளவுக்கு அவனது நண்பன் தினேஷ், பல பெண்களை ஏமாற்றியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததும், பல பெண்களின் ஆபாசப் படம் அவனிடம் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் காசியின் நண்பனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான தினேஷை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், காசி மீது மேலும் பல வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், காசியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக 100 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த வழக்கில் காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமீன் கிடைத்து. ஆனால், நாகர்கோவில் காசிக்கு மட்டும் ஜாமீன் கிடைக்காத நிலையில், அவனிடம் போலீசார் தொடர்ந்து தற்போது வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காசி மீது சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி பரபரப்பு புகார் ஒன்றை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளித்தார். சிபிசிஐடி போலீசாரிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், காசியின் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காசியை 10 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காகக் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் 
செய்தனர். இதனால், நாகர்கோவில் காசி வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

மேலும், நேற்றைய முன் தினம் கல்லூரி மாணவி அளித்த தகவலின் படி, பெண்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி, ஆபாசப் படங்கள் எடுக்கப்பட்டது போன்ற உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி, காசி தான் அணிந்திருக்கும் கை கடிகாரத்தில் உள்ள கேமராவை பயன்படுத்தி, பல பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்டதாக கூறப்படும் 800 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாசப் புகைப்படங்களை சைபர் கிரைம் போலீசார் உதவி உடன், சிபிசிஐடி போலீசார் தற்போது மீட்டு உள்ளனர்.

அத்துடன், இந்த வழக்கில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட அவனது நண்பர்கள் விரைவில் சிக்குவார்கள் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

முக்கியமாக, இந்த வழக்கில், 5 நாள் காவல் முடிந்து காசியை நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இன்னும் 20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் புகார் தெரிவித்தனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளதால், காசி வழக்கில் இனி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.