கடந்த 2002-ம் ஆண்டு திரையுலககில் அடியெடுத்து வைத்தவர் மல்லிகா மல்லிகா ஷராவத். தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்தாலும் 2005-ம் ஆண்டு ஜாக்கி சான் நடித்த தி மித் என்ற படத்தில் நடித்திருந்தார். 2007ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலம் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு கமல் ஹாசன் ஜோடியாக தசாவதாரம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகை மல்லிகா ஷராவத்தின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆகிறார். 

இதையடுத்து கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துளசேந்திரபுரத்தில் கொண்டாட்டமாக உள்ளது. ஒரு தமிழ் பெண் அமெரிக்க துணை அதிபர் ஆகிறார் என்று தமிழக மக்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளனர். 

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் தான் கமலா ஹாரிஸுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மல்லிகா ஷெராவத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்தார். கமலா ஹாரிஸ் எதிர்காலத்தில் அமெரிக்க அதிபர் ஆவார் என்று சொல்கிறார்கள் என மல்லிகா ஷெராவத் ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டை தற்போது பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, மல்லிகா ஷெராவத் ஒரு தீர்க்கதரிசி. 11 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டாரே என்று தெரிவித்து பாராட்டி வருகின்றனர். 

நிஜமாகவே இந்நிகழ்வு பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. நடிகை மல்லிகா ஷராவத் கடந்த ஆண்டு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். இந்த ட்வீட்டை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள். மேலும் மீண்டும் மல்லிகா ஷராவத் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் கலாசலா பாடலுக்கு நடனமாடியதை மறக்க முடியாது என கமெண்ட் செய்து வருகின்றனர். தரணி இயக்கத்தில் போலீஸாக சிம்பு நடித்த அந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் வந்து ஆடியிருப்பார் மல்லிகா ஷராவத்.