இந்திய திரையுலகின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் மாதவன். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ராக்கெட்ரி படத்தில் இயக்கி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. அதுதவிர்த்து ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள திரைப்படம் சைலன்ஸ் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். திகில் கலந்த கிரைம் த்ரில்லரான இப்படம் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரபல ஹிந்தி மீடியாவிற்கு பேட்டியளித்தவர் மின்னலே இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசுகையில், மின்னலே 2 குறித்த ரூமர்களை படித்து தெரிந்துகொள்கிறேன். இப்போதைக்கு அது போன்ற எண்ணம் ஏதும் இல்லை என்று தெளிவு செய்துள்ளார். அப்படியே இருந்தாலும், மின்னலே படத்தின் கேரக்டருக்கு வயது ஆகியிருக்கும். அதற்கு ஏற்றவாறு ஸ்ரிப்ட்டை அமைக்க வேண்டும். 

2001-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் மின்னலே. இந்தப் படத்தின் மூலமாக இயக்குனராக கெளதம் மேனன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

அலைபாயுதே படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் நாயகனாக நடித்த படம். மாதவன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகவும் முக்கியமானதே. படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் போற்றப்படுகிறது. அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் சார்லி ரீமேக்கான மாறா திரைப்படத்தில் நடித்துள்ளார் மாதவன்.