#11yearsofSivakarthikeyan கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ‘மாவீரன்’ படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ இதோ..

சிவகார்த்திகேயனை கொண்டாடிய மாவீரன் படக்குழு - Maaveeran team celebrating 11 years of sivakarthikeyan | Galatta

அனைத்து வயதினரையும் எளிதாக ரசிக்க வைத்து விட கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின் 2012 ஆண்டில் தமிழ் சினிமாவில் மெரினா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து திரைத்துறையில் அவரது உழைப்பு அவரை நல்ல உயரத்திற்கு ஆரம்பத்திலே கொண்டு சேர்த்தது. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலிருந்தே அனைத்து தரப்பு மக்களையும் கவரும் அளவான படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக தற்போது வளர்ந்து உள்ளார். ஜனரஞ்சகமான படங்கள் மூலம் பிளாக்பஸ்டரை கொடுக்க தொடங்கிய சிவ கார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகன் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். குறிப்பாக அவரது முந்தைய படங்களான ‘டாக்டர்’, ‘டான் திரைப்படங்களின் வெற்றி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடிப்பு மட்டுமல்லாமல்  பாடல் எழுதுவது பாடுவது மற்றும் தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் களமிறங்கி வெற்றி பெற்று கவனம் பெற்று வருகிறார். தனக்கான ரசிகர்  வட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் சிவகார்த்திகேயன் வர்த்தக ரீதியான வெற்றி தரும் கதாநாயகன் பட்டியலிலும் விரைவாக இடம் பிடித்துள்ளார். நடிக்க வந்த சில ஆண்டுகளிலே தமிழ் சினிமா அதிகம் பேசும் விரும்பும் நட்சத்திரங்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். தற்போது சிவ கார்த்திகேயன் ‘அயலான்’, ‘மாவீரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அதனை மாவீரன் படக்குழு படபிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான சிறப்பு வீடியோவை படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ளது. இதனையடுத்து ரசிகர்களால் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

From the sets of #Maaveeran @Siva_Kartikeyan 💐😇#11YearsOfPrinceSKism #Mahaveerudu@madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @DirectorMysskin @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @LokeshJey @sivadigitalart @DoneChannel1 @UrsVamsiShekar pic.twitter.com/6lncBTHnOI

— Shanthi Talkies (@ShanthiTalkies) February 4, 2023

மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோனே அஷ்வின்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது சிவகார்த்திகேயன் மிக மும்முரமாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்க பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். வித்யாசமான அதிரடி ஆக்ஷன் காட்சியுடன் வெளியான டைட்டில் புரோமோ முன்னதாக  வைரலானது. இப்படத்தில் சிவ கார்த்திகேயனுடன் இணைந்து அதீதி சங்கர், சுனில், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

புகழ் - மணிமேகலை வரிசையில் தனது கனவை கடின உழைப்பால் நிஜமாக்கிய குக் வித் கோமாளி சக்தி! குவியும் பாராட்டுகள்
சினிமா

புகழ் - மணிமேகலை வரிசையில் தனது கனவை கடின உழைப்பால் நிஜமாக்கிய குக் வித் கோமாளி சக்தி! குவியும் பாராட்டுகள்

இன்னும் எவ்ளோ அப்டேட் இருக்கு?.. 'தளபதி 67' படத்தின் அடுத்த அப்டேட் இதோ .. - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் படக்குழு..
சினிமா

இன்னும் எவ்ளோ அப்டேட் இருக்கு?.. 'தளபதி 67' படத்தின் அடுத்த அப்டேட் இதோ .. - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் படக்குழு..

தளபதி விஜயுடன் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்..  Surprise ஆன ரசிகர்கள்.. - மகிழ்ச்சியுடன் செய்தியை பகிர்ந்த நடிகர்..
சினிமா

தளபதி விஜயுடன் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்.. Surprise ஆன ரசிகர்கள்.. - மகிழ்ச்சியுடன் செய்தியை பகிர்ந்த நடிகர்..