பிக்பாஸ் வீட்டின் என்பத்தி ஒன்பதாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், தங்கமுட்டையை பாதுகாக்கும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் இறுதி போட்டிக்கு செல்வதற்கான ஃபினாலே டிக்கெட்டை பெறலாம். சாண்டி டாஸ்கில் தோற்றதால், முகென் மற்றும் தர்ஷனுடன் சேர்ந்து சாண்டி திட்டம் தீட்டுவதாக லாஸ்லியா கூறுகிறார். 

Kavin Scolding Sandy For His Strategy

Kavin Scolding Sandy For His Strategy

டாஸ்க்கின் போது இது போன்ற விஷயங்கள் நடப்பது இயல்பே என்ற பக்குவத்தை உணர்த்துகிறார் தர்ஷன். இதை திட்டம் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று கவினுக்கு கூறுகிறார். டாஸ்க் துவங்கிய போதே லாஸ்லியாவிற்கு ஆதரவாக கவின் செயல்படுவது அனைவருக்கும் வெறுப்பை வரச்செய்கிறது.

Kavin Scolding Sandy For His Strategy

Kavin Scolding Sandy For His Strategy

தரவரிசை பட்டியலில் கவின் பின்தங்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். சேரன் முதுகுவலி காரணமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். ப்ரோமோவை கீழுள்ள லிங்கில் காணலாம்.