மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இந்துஜா ரவிச்சந்திரன்.இந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் இந்துஜா ரவிச்சந்திரன்.இதனை தொடர்ந்து அதர்வாவின் பூமராங்,கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி,சூப்பர் டூப்பர்,மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்தார் இந்துஜா.

இந்த படங்களின் வெற்றி இந்துஜாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் இந்துஜா.பெண்கள் கால்பந்தை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் இந்துஜா.

இவற்றை தவிர சில ஆல்பம் பாடல்கள் மற்றும் வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்து அசத்தியிருந்தார் இந்துஜா.மூக்குத்தி அம்மன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார் இந்துஜா.இதனை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் காக்கி படத்தில் நடித்து வருகிறார் இந்துஜா.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இந்துஜா அவ்வப்போது தனது புகைப்படங்கள்,வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் இந்துஜா ரவிச்சந்திரன்.அப்படி தற்போதும் பாத்டப்பில் அமர்ந்த படி புதிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் இந்துஜா.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.