தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. 

Huge Update On South Indian Nadigar Sangam Election Cancelled

விதிகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீசில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Huge Update On South Indian Nadigar Sangam Election Cancelled

மேலும் வாக்களிக்க தகுதி உள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளதாகவும், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தலை ஒத்திவைக்கவும் மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.