சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்திருந்த தொடர் தெய்வமகள்.விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவான இந்த தொடர் 2013 மார்ச் முதல் 2018 பிப்ரவரி வரை கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒளிபரப்பானது.1400க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த தொடரில் கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார்.ரேகா கிருஷ்ணப்பா இந்த தொடரின் முக்கிய வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.அண்ணியார் என்று ரசிகர்களால் தனது கதாபாத்திரத்தின் பெயராலேயே பலராலும் அழைக்கப்பட்டார்.மேலும் பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரின் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி போஜன்.இந்த தொடரின் மூலம் கனவுக்கன்னியாக மாறினார் வணிபோஜன்.இதற்கு தொடர்ந்து சில முன்னணி தொடர்களில் நடித்து அசத்தியிருந்தார் வாணி போஜன்.இதற்கு பிறகு சில படங்களில் நடித்து தனது சினிமா கனவை நனவாகினார் வாணி போஜன்.மேலும் சில முக்கிய படங்களில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமாக மாறிவர்களில் ஒருவர் உஷா.இவர் கர்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் உஷா.தற்போது தனது பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.