ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரும்,ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமாக இருந்தவர் டேவிட் வார்னர்.இவரது அதிரடி ஆட்டத்துக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.சன் ரைஸர்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் அசத்தி வருகிறார்.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்தனர்.இந்த நேரத்தில் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வந்தார்.இதில் இவர் அல்லு அர்ஜுனின் சமீபத்திய ஹிட் பாடலான புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆனது.

சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் கூட இவரை நடனமாட சொல்லி பல ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.தனது பிறந்தநாள் அன்று நடந்த ஒரு போட்டி ஜெயித்து விட்டு சன்ரைஸர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இவர் புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடும் வீடீயோவை அணி நிர்வாகம் பதிவிட்டனர்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.இன்று முதல் ஒரு நாள் நடைபெற்றது.இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தியது.இந்த போட்டியில் fielding செய்தபொழுது டேவிட் வார்னர் ரசிகர்களுக்காக புட்டபொம்மா ஸ்டெப்பை மைதானத்தில் போட்டுள்ளார்.இதனை ரசிகர் ஒருவர் பதிவிட்டு அப்லோட் செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.