பாண்டவர் இல்லம் நடிகைக்கு திருமணம் ! குவியும் வாழ்த்துக்கள்
By Aravind Selvam | Galatta | November 27, 2020 18:53 PM IST

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்
சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.
கடந்த 2019 முதல் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டவர் இல்லம்.இந்த தொடரில் பாப்ரி கோஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்,மற்றொரு ஹீரோயினாக ஆதித்யா டிவி,சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கிய ஆர்த்தி சுபாஷ் நடித்து வருகிறார்.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும் பாப்ரி கோஷிற்கு திருமணம் நடந்துள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.கலாட்டா சார்பாக மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.