தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இதில் என்ன சந்தேகம், இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதன். 

Comedian Vivek Trolls In Social Media With Meme Goes Viral

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெள்ளை பூக்கள் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. தளபதி 63 படத்திலும் நடித்து வருகிறார் விவேக்.

Comedian Vivek Trolls In Social Media With Meme Goes Viral

தற்போது ட்விட்டரில் படிக்காதவன் படத்தில் விவேக் வில்லனிடம் அடிவாங்கிவிட்டு வெளியே வரும் புகைப்படத்தை பதிவு செய்து என்ன பஸ் டே கொண்டாடிட்டீங்களா என்று கிண்டலாக அந்த மீமில் போடப்பட்டுள்ளது. அதனை கனத்த இதயத்தோடு சிரித்துவிட்டு, இதனை யோசித்துப் பார்க்கலாம் என்றும் விவேக் தெரிவித்துள்ளார்.