நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

Boney Kapoor Says Valimai Will Release Only In Theatres

லாக்டவுன் முடிந்தவுடன் இப்படத்தின் ஆக்ஷன் நிறைந்த சேஸிங் காட்சிகளை எடுக்கவுள்ளதாக செய்திகள் இணையத்தில் கிளம்பின. இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்கையில், அதுபோன்ற செய்திகள் ஏதும் இல்லை. இணையத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சமீபத்தில் தெளிவு படுத்தினர். 

Boney Kapoor Says Valimai Will Release Only In Theatres

இந்நிலையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்தவர், வலிமை படம் குறித்து பேசியுள்ளார். படங்களை திரையரங்கில் வெளியிடுவதே சிறந்த அனுபவத்தை தரும். அவருடைய மைதான், வலிமை போன்ற படங்களை தியேட்டர் ரிலீஸ் தான் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரை, எனது படங்களை பெரிய திரைக்குக் கொண்டுவருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.ஒரு தயாரிப்பாளராக என்னுடைய 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் திரையரங்கில் வெளியாகும் படம் தான் ரசிகர்களை கொண்டாடத்தில் ஈடுபட செய்கிறது என கூறியுள்ளார்.