கடந்த 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை அனுயா. அதைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நான் போன்ற படங்களில் நடித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் அனுயா. அனுயாவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமைந்த படம் நண்பன். 

Anuya Bhagvath Reveals Nanban Shooting Secrets Vijay

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹீரோயினின் அக்காவாக நடித்திருப்பார் அனுயா. படத்தில் தளபதி விஜய்யை அடிப்பது போல் காட்சியிருக்கும். இந்த காட்சி உருவான விதம் குறித்து நம் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் அனுயா. 

Anuya Bhagvath Reveals Nanban Shooting Secrets Vijay Anuya Bhagvath Reveals Nanban Shooting Secrets Vijay

படப்பிடிப்பின் போது தளபதி விஜய்யை எப்படி அடிப்பது என்று யோசித்தேன். பின் இயக்குனர் ஷங்கர் சார் வந்து பேசினார். நீங்கள் நல்ல நடிகை என்று நினைத்தேன். தளபதி விஜய் என்று நினைக்காமல், பஞ்சவன் பாரி வேந்தன் என்ற கேரக்டராக நினைத்து அடியுங்கள் என்றார். அதன் பின் விஜய்யை அடித்தேன் என்று கூறினார். என்னதான் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும், தளபதி ரசிகர்களுக்கு நண்பன் ஸ்பெஷல் தான்.