சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Soorarai Pottru Motivational Song By Arunraja Kamaraj Soorarai Pottru Motivational Song By Arunraja Kamaraj

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

Soorarai Pottru Motivational Song By Arunraja Kamaraj

படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுமம், படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியது. தற்போது இப்படத்தின் பாடல் குறித்து பேசியுள்ளார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். பிரபல சினிமா விமர்சகர் கௌஷிக் உடன் லைவ்வில் தோன்றியவர், பாடல் இளைஞர்கள் விரும்பும் வகையில் இருப்பதாகவும், மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும் என்ற ருசிகர செய்தியை தெரிவித்தார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர், தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் போன்ற படங்களும் திரைக்கு வரவுள்ளது.