கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி விருந்தாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மாஸ்டர் டீஸரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாகினர். அதிக பார்வையாளர்களை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது இந்த டீஸர். திரைப்பிரபலங்களும் டீஸரை கொண்டாடினர். 

இந்நிலையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் இருவரும் பாண்டிச்சேரி கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி கச்சேரி... நிவர் புயலுடன் ஒரு செல்பி என்று கேப்ஷன் தந்துள்ள ரத்ன குமார் இந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவை கலக்கும் இரண்டு இளம் புயல்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட இந்த அற்புதமான செல்ஃபி இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறும்பட காலத்திலிருந்தே லோகேஷ் மற்றும் ரத்ன குமார் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. உச்சம் தொட்ட இயக்குனர்களாக இருந்தாலும், இப்படி புயல் நேரத்தில் வெளியே செல்லலாமா என்று அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள்.