பிக் பாஸ் 4வது சீசனில் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வாரா வாரம் வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. போன வாரம் வழங்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க் காற்று மழை என அனைத்தையும் தாண்டி நடைபெற்றது. நேற்றைய ஹைலைட்டாக ஆரி மற்றும் பாலாவின் சண்டை அமைந்தது. ஆரியை டார்கெட் செய்கிறார்களா ஹவுஸ்மேட்ஸ் என்ற குழப்பத்தில் இருந்தனர் பிக்பாஸ் ரசிகர்கள். 

இந்நிலையில் இன்று முதல் ப்ரோமோவில் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதில் போட்டியாளர்கள் சிலர் கால் சென்டர் ஊழியர்களாக மாறி இருக்கின்றனர். மற்றவர்கள் போன் செய்து கேள்வி கேட்கும் நபர்களாக இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டின் 51வது நாளான இதில் முதல் ஆளாக அர்ச்சனா போன் செய்து பாலாஜியிடம் ஒரு கேள்வியை கேட்டு இருக்கிறார். நேற்று நாமினேஷன் டாப்பில் கார்டு பெறுவதற்கான டாஸ்கில் பேசும்போது அர்ச்சனாவை பாலாஜி நாமினேட் செய்து இருந்தார். அவர் சிலரை முன்னிறுத்தி இந்த விளையாட்டை விளையாடுகிறார் என அவர் குற்றம்சாட்டினார். அது யார் யார் என சொல்லுங்கள் என அர்ச்சனா கேட்கிறார்.

அதற்கு பதில் கூறிய பாலாஜி நீங்க முன்னிறுத்தி விளையாடுவது சோம், ரியோ மற்றும் கேபி என கூறுகிறார். இதனால் இன்று பிக் பாஸ் வீட்டில் பல பரபரப்பான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இன்று இரவு ஷோ ஒளிபரப்பானால் தான் தெரியவரும்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில் கேபி மற்றும் அர்ச்சனாவிடம் சண்டைக்கு செல்கிறார் பாலா. உச்சக்கட்ட கோபத்தில் இருந்த அர்ச்சனா, என்ன அக்கா-னு கூப்பிடுறத நிறுத்து...அர்ச்சனா-னு கூப்பிடு என்று கூற, சரி அர்ச்சனா என்கிறார் பாலா. இந்த பிரச்சனை நிச்சயம் பெரிதாக வெடிக்கும். இதனால் மற்ற ஹவுஸ்மேட்ஸுக்கும், பிக்பாஸ் ரசிகர்களுக்கும் என்டர்டெயின்மென்ட் நிச்சயம் என கூறலாம். சண்டையை வேடிக்கை பார்க்கும் ஷிவானியை நடுவில் இழுத்துவிடுவார்களா என்பது போக போக தெரியும்.