தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

Archana Kalpathi Viral Post on Twitter About Thalapathy Vijay Starrer Thalapathy 63 Update

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

Archana Kalpathi Viral Post on Twitter About Thalapathy Vijay Starrer Thalapathy 63 Update

இந்த படத்தின் அப்டேட்க்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Archana Kalpathi Viral Post on Twitter About Thalapathy Vijay Starrer Thalapathy 63 Update

தளபதி 63 குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று தெறி படத்தில் வரும் GIF ஒன்றோடு பதிவிட்டுள்ளார்.இதனை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அப்டேட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.Firstlook பற்றிய அப்டேட் தானா என்பதை நாம் இன்று மாலை வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்