விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இவருக்கென்று ரசிகர்கள் பக்கங்கள்,வீடியோ எடிட்கள் என்று ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.

இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவரும் இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.தனித்தனியாக ரசிகர் பக்கங்களை தாண்டி இருவருக்கும் சேர்த்து நிறைய ரசிகர் பக்கங்கள் உருவாகின.இவர்கள் ஜோடியாக மக்கள் மனதில் இடம்பிடிக்க இருவரும் நிஜத்திலும் ஜோடியாக மாறினர்.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வந்தார்.இந்து நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவழித்து வருகின்றனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.மகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்த ஆல்யா சில நாட்களுக்கு முன் விஜய் டிவி சீரியலில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார்.ஒரு சீரியலுக்கான டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது என்று சில புகைப்படங்களை பகிர்ந்த ஆல்யா தனக்கு பிடித்த இயக்குனர் பிரவீன் பென்னட் இதனை இயக்கியுள்ளார் என்றும் அவர் ரசிகர்களுக்கு க்ளூ கொடுத்துள்ளார்.

ஆல்யா சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு புதிய சீரியலின் பைலட் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டதாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.மேலும் சில லுக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவந்தார்.இந்த தொடரின் புகைப்படம் ஒன்றை சில நாட்களுக்கு முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்தார்,இதன் மூலம் திருமணம் சீரியலில் பிரபலமான சித்து இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியானது , விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகமாக இந்த தொடர் உருவாக உள்ளது.இந்த ப்ரோமோவை வைத்து ரசிகர்கள் இது ஹிந்தியில் சூப்பர்ஹிட் தொடரான Diya Aur Baati Hum தொடரின் ரீமேக் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு என் கணவன் என் தோழன் என்றும் ஒளிபரப்பட்டது.டப் செய்யப்பட்ட தொடரை ஏன் ரீமேக் செய்கிறீர்கள் என்று ரசிகர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.இருந்தாலும் இந்த தொடர் Diya Aur Baati Hum-ன் ரீமேக் தானா இல்லை புதிய கதைக்களம் கொண்ட தொடரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடனத்தில் ஆர்வம் கொண்டவரான ஆல்யா மானசா தனது நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார்,தற்போது ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில வீடியோக்களை அவர் பகிர்ந்து வந்தார்.தற்போது தாராளபிரபு பாடலுக்கு படத்தில் வருவதுபோலவே நடனமாடி அசத்தியுள்ளார் மானசா , இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

🥰🥰gorgeous neckpiece & earring @_sruthis_156creations_ Lovely dress @aatwos

A post shared by alya_manasa (@alya_manasa) on