தென்னிந்தியா திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலன்ஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனர். 

கோனா பிலிம்கார்ப்பரேஷனுடன் இணைந்து பீப்பிள் மீடியா கார்ப்ரேஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா  ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

மைக்கேல் மேட்சனுக்கு இந்திய சினிமாவில் இதுமுதல் படமாக அமையும். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம். நிஷப்தம்/சைலென்ஸ் திரைப்படத்தின் முதல் நேரடி சேவையின் உலகளவிலான பிரீமியரை சமீபத்தில் அறிவித்தது. காது கேட்காத மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். 

துப்பறியும் போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர். கடைசி வரை யூகிக்க முடியாத ஒரு உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ட்ரைலரை வெளியிடுகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து ராக்கெட்ரி திரைப்படம் கைவசம் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.

மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.