தமிழ் சினிமாவில் பல கட்டங்களில் பல நாயகர்கள் வெற்றிகரமாக இருந்துள்ளனர்.ஆனால் காலங்களை கடந்து நிற்பது சில உச்சநட்சத்திரங்கள் மட்டுமே.அதிலும் இருதுவாரங்களாக இரு நடிகர்கள் இருப்பதும் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாவதும்,அவர்களுக்குள் ரசிகர் சண்டைகள் நடப்பதும் தமிழ் சினிமாவில் இயல்பான ஒன்று.

எம்ஜி ஆர்-சிவாஜி,ரஜினிகாந்த்-கமல்ஹாசன் என்று இந்த ரசிகர் சண்டைகள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக இருப்பது விஜய்-அஜித் இருவரும் தான்.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் இவர்கள் இருவரும் வெற்றிகரமாக இருந்து வருகின்றனர்.தல-தளபதி இருவருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

விஜய்-அஜித் இருவரும் நண்பர்களாக இருந்தாலும்,அவர்களது ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை.அதிகமாக ரசிகர் சண்டை போடப்பட்டது இந்த இரு ரசிகர்கள் இடையில் தான்,.பேனர் சண்டையில் தொடங்கி ட்விட்டர் வரை ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்து சண்டை போட்டு விடுவார்கள்.இவை ட்ரெண்ட் அடித்தும் விடும்.தியேட்டர் சண்டைகள்,ஆர்குட் சண்டைகள் தொடங்கி பல பரிமாணங்களை கடந்து இன்றும் இவர்களது சண்டைகள் ஓய்ந்தபாடில்லை.

எப்போதும் சண்டைபோட்டு கொள்ளும் தல தளபதி ரசிகர்கள் சில முக்கிய சமூகப்பிரச்னைகளுக்கு இணைந்தும் குரல் எழுப்பியுள்ளனர்.சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு,தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடங்கி தற்போதுள்ள சாத்தான்குளம் பிரச்சனை வரை பல சமூகப்பிரச்னைகளை மக்களுக்கு கொண்டுசெல்லவும் தல தளபதி ரசிகர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் விஜய் ரசிகர் ஒருவர் தனது பெரியப்பாவிற்கு உடல்நிலை மோசமாக உள்ளது என்றும்,தான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் என்றும் ,தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இதற்கு பல தளபதி ரசிகர்களும் உதவி செய்து வந்துள்ளனர்.இந்த டீவீட்டை கவனித்த தல ரசிகர்கள் சிலர் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.இதற்கு உதவி கேட்ட தளபதி ரசிகர்கள் தல ரசிகர்களுக்கு நன்றி , பல நேரங்களில் நாம் சண்டைபோட்டிருந்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவியதற்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மேலும் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தும் வருகின்றனர்.

என்னதான் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தாலும், விஜய் ரசிகர்களுக்கு பிரச்சனை என்றால் முதலில் வருவது அஜித் ரசிகர்கள் தான்,அதே போல அஜித் ரசிகர்களுக்கு பிரச்சனை என்றால் வருவது விஜய் ரசிகர்கள் தான்.இதனை பலக்கும் நிரூபிக்கும் வகையில் #AjithVijayPrideOfIndia என்ற ஹாஸ்டேக்கை தல தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.