தமிழ் திரையுலகில் ரசிகர்களின் அபிமானம் பெற்று வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர் அபர்ணா பாலமுரளி. இவர் இந்தியாவின் பாரம்பரியமனா இசை மற்றும் பரத நாட்டியம்,  மோகினி ஆட்டம், குச்சிப்புடி உட்பட நடன பலவகை யுத்திகளை தன் கைவசம் கொண்டுள்ளார். மலையாளத்தில் வெளிவந்த யாத்திரை தொடரும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2016-ம் ஆண்டு  மலையாளத்தில் வெளிவந்த மகேசென்ட் பரதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். 

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, ஒரு முத்திசை காடா, மழையாய் உட்பட மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஸ்ரீ கணேஷ்  இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார். அதன் பின் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் நடித்திருந்தார். சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

இந்நிலையில் அபர்ணா பாலமுரளியின் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது. காலை முதல் அந்த புகைப்படத்தை வைத்து ட்ரெண்ட் செய்து வந்தனர் திரை ரசிகர்கள். சூரரைப் போற்று படத்தில் ஹோம்லி லுக்கில் தோன்றிய அபர்ணா, தற்போது மாடர்ன் லுக்கில் அசத்துகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சூர்யா அறிவித்தார். முன்னணி ஹீரோ ஒருவரின் படம், ஓடிடி தளத்தில் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியது.