மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார் நடிகர் ஷாந்தனு. 

shanthanu

இதைத்தொடர்ந்து ஷாந்தனு அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

Master

இந்நிலையில் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கொரோனா வைரஸ் பாதுகாப்பாக, வீட்டில் இருங்க, உடலை ஃபிட்டாக வைத்து கொள்ளுங்க, உடற்பயிற்சி செய்யுங்கள் என சொல்லி கொண்டிருக்க, அவரின் மனைவி குறுக்கிட்டு, நேற்று வரைக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள், நன்றாக சாப்பிட்டு உறங்கி கொண்டு தானே இருந்தீர்கள் என சொல்கிறார். மனைவியிடம் மாட்டிக்கொண்ட ஷாந்தனு, கருத்து சொல்லுங்க, ஆனால் மனைவி முன்னாடி சொல்லாதீங்க என கிண்டலாக பதிவு செய்துள்ளார்.