ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாகியவர் நடிகை ஆல்யா மானஸா. சீரியல் உலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஷெண்பா எனும் பாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதே சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

alyamanasa

அவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த ஆல்யா மானஸாவிற்கு சில தினம் முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

Alyamanasa Alyamanasa

இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் வைரலானது. மகளுக்கான வாங்கிய அழகிய தொட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த தொட்டில் எனது க்யூட் ஏஞ்சலுக்காக என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரின் இப்பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.