மேயாத மான் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் இந்துஜா ரவிச்சந்திரன்.அந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.இதனை தொடர்ந்து அதர்வாவின் பூமராங்,கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனை தவிர ஆரியாவின் மகாமுனி ,தளபதி விஜயின் பிகில் உள்ளிட்ட முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார்.இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இவரது முதல் படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இவருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.Annabelle பேயாக அறிமுகமாகி இன்று பிகில் படத்தில் நடித்திருக்கும் உங்கள் வெற்றி தொடரட்டும் சிங்கப்பெண்ணே என்று அவர் பதிவிட்டுள்ளார்.கலாட்டா சார்பாக இந்துஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்