ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. 

இந்நிலையில் கனா படத்தை தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகவுள்ளது என்ற தகவல் தெரியவந்தது. இயக்குனர் தனா இயக்கும் வானம் கொட்டட்டும் படத்திலும், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் SK 16 படத்திலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.