இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.தற்போது செம பிஸியாக மஹாவீர் கர்ணா படத்தில் நடித்து வருகிறார்.இவரது துருவ நட்சத்திரம் படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இவர் நடிப்பில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கிறார்.தூங்காவனம் படத்தினை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஸ்ருதி ஹாசன் பாடிய கடாரம் கொண்டான் என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.