சுட்டுப்பிடிக்க உத்தரவு,வெண்ணிலா கபடி குழு 2 படங்களை தொடர்ந்து விக்ராந்த் நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் பக்ரீத்.வசுந்தரா காஷியுப் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவரை தவிர ஒரு ஒட்டகமும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

இந்த படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுப்பு.இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் ஜெகதீசன் சுப்பு பண்ணியாற்றியுள்ளார்.D இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.எடிட்டராக ஆன்டனி எல் ரூபன் பணியாற்றியுள்ளார்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் வெளியாகியுளளது.