அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. மேலும் இந்தப் படத்தில் பிரபல டிவி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரிக்கிறது.

Vanibhojans Video On Oh My Kadavule

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

Vanibhojans Video On Oh My Kadavule

அனிருத் பாடிய பிரண்ட்ஷிப் ஆன்தம் பாடல் வெளியானது. இதைத்தொடர்ந்து இரண்டாம் பாடலான ஹய்யோ ஹய்யோ பாடல் சமீபத்தில் வெளியானது. பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார். லியோன் ஜேம்ஸ் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு நன்றி கூறும் வகையில் வாணி போஜன் வீடியோ பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் டிக்டாக் வீடியோக்களை கண்ட வாணி போஜன் பாராட்டியுள்ளார்.