சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Nivetha Thomas About Darbar

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் டீஸர் டிசம்பர் முதல் மாதம் வெளியாகும் என்று நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது.

Nivetha Thomas About Darbar Nivetha Thomas About Darbar

தற்போது படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நிவேதா தாமஸ், தனது இன்ஸ்டாகிராமில் திரைப்படம் பற்றியும் சூப்பர்ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் பதிவு செய்திருந்தார்.