தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் முக்கிய காட்சிகளுக்காக, டெல்லி விரைந்தனர் என்பது தெரியவந்தது.

Nagendra Prasad In Thalapathy 64 Nagendra Prasad In Thalapathy 64

படத்தின் நாயகி மாளவிகா மோஹனன், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியதாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார். டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது. இதில் 96 புகழ் கௌரி கிஷனும் கலந்து கொள்கிறார் என்பது கூடுதல் தகவல். 2020 ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Nagendra Prasad In Thalapathy 64

தற்போது கில்லி படத்தில் விஜய்யுடன் நடித்த நாகேந்திர பிரசாத் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்தது. குஷி படத்தில் முதல் முதலாக விஜயுடன் சேர்ந்து நடித்தார் என்பது கூடுதல் தகவல்.