மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி அசத்திவரும் படம் கைதி. இப்படம் முழுவதுமே இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.

Mahesh Babu Reviews Kaithi

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இதனை எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இதில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியன், ரமணா, தீனா, தலைவாசல் விஜய், பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்.

Mahesh Babu Reviews Kaithi Mahesh Babu Reviews Kaithi

இப்படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பாடல்களே இல்லாமல் படத்தில் அமைந்துள்ள த்ரில்லிங் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்கிரிப்ட் மிகவும் பிரமாதமாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டி கூறியுள்ளார்.