சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜீவா ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | November 12, 2019 13:24 PM IST
கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து இவர் ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.தற்போது இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதே தேதியில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படமும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.@VelsFilmIntl Always targets the Family audience so They Locks their Next Biggie #Seeru 's Release Date As December 20th ! ( Christmas Holidays ) #SeeruFromDec20th @JiivaOfficial @rathinasiva7 @immancomposer @iamactorvarun @actorsathish @Ashkum19 @DoneChannel1 pic.twitter.com/rZLQoPGAIA
— Vels Film International (@VelsFilmIntl) November 12, 2019