லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் முதியவர் பாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.

Indian 2 Shooting In Chennai

இந்தியன் படத்தில் இடம்பெற்ற சேனாபதி தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சில நாட்கள் முன்பு இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.

Indian 2 Shooting In Chennai

தற்போது குவாலியரில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் மூன்று மாதங்கள் நடக்கவுள்ளதாக தெரிகிறது.