சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

Government Honours Rajinikanth

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்படும் என்றும், விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இம்மாதமான நவம்பர் 20-ம் தேதி துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Government Honours Rajinikanth

Government Honours Rajinikanth

இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. சிறந்த நடிகர் அல்லாது சீரான மனிதரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் இந்த விருது இருப்பது விருதிற்கு தான் பெருமை. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது நம் கலாட்டா.