டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக விக்ரம்-58 படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

Chiyaan 58 Shoot In Kerala

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.

Chiyaan 58 Shoot In Kerala

இந்நிலையில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கிரிக்கெட்டர் இஃர்பான் பதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது கேரளாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.