ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து பிகில் படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீஸான மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்தது.

Archana Kalpathy About Bigil

ரூ. 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிகில் வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. பிகில் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ. 152 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Archana Kalpathy About Bigil

Archana Kalpathy About Bigil

தற்போது படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, பிகில் திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது பற்றி பதிவு செய்துள்ளார்.