கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய படம் சாட்டை. இப்படம் அரசு பள்ளி மாணவர்களின் பிரச்சனைகளை பேசிய படமாகும். அன்பழகன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த சாட்டை என்று உருவாகி நேற்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Adutha Saattai Kari Kadu Video Song Adutha Saattai Kari Kadu Video Song

இந்த முறை கல்லூரி மாணவர்களின் பிரச்சனைகளை பேசியிருப்பதாக தெரிகிறது. இதில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, யுவன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Adutha Saattai Kari Kadu Video Song Adutha Saattai Kari Kadu Video Song

இந்த படத்தை 11:11 புரொடக்ஷன் நாடோடிகள் ஃபிலிம்ஸ், ஸ்ரீ வாரி ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் கரி காடு தானே பாடல் வீடியோ வெளியானது. சத்யன் இளங்கோ பாடியுள்ள இந்த பாடல் வரிகளை தேன்மொழி தாஸ் எழுதியுள்ளார்.