தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Actress Meena In Thalaivar 168

இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா முதன் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்பட்டு வருகிறது. தர்பார் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், நேற்று மாலை சும்மா கிழி பாடல் வீடியோ வெளியாகி இணையத்தை தெரிக்கவிடுகிறது. 

Actress Meena In Thalaivar 168 Actress Meena In Thalaivar 168

Actress Meena In Thalaivar 168

படத்தில் நடிகர் சூரி, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை மீனா இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. 24 வருடங்களுக்கு முன்பு வெளியான முத்து படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடித்திருந்தார் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் துவங்கி எஜமான், வீரா போன்ற படங்களில் நடிகை மீனா நடித்திருந்தார்.