தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் முக்கிய காட்சிகளுக்காக, டெல்லி விரைந்தனர் என்பது தெரியவந்தது.

Actor Premkumar Joins Thalapathy64

படத்தின் நாயகி மாளவிகா மோஹனன், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியதாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார். டெல்லி கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது. இதில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்து வருகின்றனர். 2020 ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Actor Premkumar Joins Thalapathy64 Actor Premkumar Joins Thalapathy64

தற்போது குணச்சித்திர நடிகர் பிரேம் குமார் படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவும் செய்துள்ளார். விஜய்யுடன் சர்க்கார் படத்திலும் நடித்திருந்தார் என்பது நாம் அறிந்தவையே.