அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, ‘’ இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் தேர்தலுக்கு வரலாம். கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை.  திட்டமிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்” என்று கூறி வந்தார். 

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட தொகுதிகளில் மக்களிடம் பரப்புரையில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்லும்விதமாக, ‘’ குடும்ப அரசியல் , வாரிசு அரசியல் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசி வருவது, ஓபிஎஸ் மகனை நினைத்துப் பேசுகிறார்.

வாய்க்கு வந்ததையெல்லாம் பிரசாரத்தில் பேசிவருகிறார். பதவி கொடுத்தவர்களுக்குத் துரோகம் செய்து பாவம் செய்த முதல்வரைத் தான் கடவுள் தண்டிப்பார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் இவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்’’ என்றுள்ளார்.