நடைபாதை வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் முனைவோர்கள் வரை வரவேற்கும் அதிமுக தேர்தல் அறிக்கை  உள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.


அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லா சுழல் நிதி, வணிகர்களுக்கு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் சலுகை 250ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மேலும் நடைபாதை வியாபாரிகளின் நலன் காத்திடும் வகையில் அவர்களுக்கு 10,000 ரூபாய் வட்டியில்லா சுழல் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் சலுகை 200 குதிரை திறனில் இருந்து 250 குதிரை திறனாக உயர்த்தி வழப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுவதாக  அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.