புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். 


அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”உங்களுடைய வேட்பாளர் விஜயபாஸ்கர் நன்கு அறிமுகமானவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்களுடைய பிரச்சினை தீர்க்கக் கூடிய சிறப்பான  வேட்பாளர். நம்முடைய விஜயபாஸ்கர் கொடுக்கின்ற பொறுப்பை சரியான முறையில் நிர்வாகம் செய்கிறார். சுகாதார துறைக்குப் பெருமை சேர்ப்பது மட்டுமல்ல,நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய  நல்ல இலாகா அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


அவருடைய இலாக்கா இன்றைக்கு தேசிய அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்  தொடர்ந்து விருதுகளைப் பெற்று வருகின்றது. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் செய்ததை ஒன்றைக்கூட தேர்தல் பிரசாரத்தில் சொல்வதில்லை. ஆனால், அதிமுக அரசை மட்டும் குறைகூறி வருகிறார்.” என்று பேசினார்.