வரதட்சணைக் கொடுமையால் மருமகளையும், கைக்குழந்தையையும் மாமியார் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாஜிபுரா மொஹல்லாவில், மருமகளிடம் வரதட்சணைக் கேட்டு, மாமியார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 மாத ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

Uttar Pradesh mother baby burnt laws over dowry

வரதட்சணை பிரச்சனைக் காரணமாக, அந்த பெண் தனது பிறந்த வீட்டில் தகவல் தெரிவிக்கவே, அந்த பெண்ணின் அண்ணன் முகமது ஜாவேத், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், உடன்பாடு ஏற்படாததால், தனது சகோதரியை, தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளா தொடரும் இப்பிரச்சனையில், அவ்வப்போது, சமாதானம் ஆவதும், அந்த பெண் தனது மாமியார் வீட்டிற்குச் செல்வதும், பின்னர் தனது தயார் வீட்டிற்குத் திரும்பி வருவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வரதட்சணைக் கொடுமை ரூத்தர தாண்டவம் ஆடவே, அந்த பெண் கடந்த சில மாதங்களாகவே தனது பிறந்த வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவரது மாமியார் பேச்சுவார்த்தை நடத்தித் தனது வீட்டிற்கு மருமகளை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்திய மாமியார், கொடுமையின் உச்சக்கட்டமாக, மருமகளையும் அவரது 3 மாத கைக்குழந்தையையும் உயிருடன் எரித்துக் கொன்றுள்ளார்.

Uttar Pradesh mother baby burnt laws over dowry

இது குறித்து பெண்ணின் அண்ணன் முகமது ஜாவேத், அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணைக்காக மருமகளையும், கைக்குழந்தையையும் மாமியார் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.