குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது.  

தமிழ்நாடு காவல் துறை சார்பில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடிப்பு  வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் புதிய புகைப்படங்களைத் தமிழக காவல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் தஞ்சாவூர் முழுவதும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. அதில், “தேடப்படுபவர்கள்” என்று தலைப்பிட்டு 4 பேரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

bomb blast accused

இதில், சாதிக் என்கிற ராஜா, முஜர்புர் ரெகுமான் என்கிற முனி, அயூப் என்கிற அசரஃப் அலி, அபுபக்கர் சித்திக் ஆகியோர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படங்களுக்குக் கீழே, குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றவாளிகள் தொடர்பாகத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு, நபர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 8 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குண்டு வெடிப்பு தொடர்பாகத் தஞ்சை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.