8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்குச் செல்லும் 8 வயது சிறுமி, இன்று பள்ளி விடுமுறை தினம் என்பதால், அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். 

sexual assault

அப்போது, சிறுமியை பாலியல் சீண்டலோடு அணுகிய 21 வயது கருணாகரன் என்ற காமுகன், சிறுமி விளையாடிக்கொண்டிருக்கும் அருகில் உள்ள பெட்டிக்கடையில், மிட்டாய் மற்றும் சிறுமிக்குப் பிடிக்கும் தின்பண்டங்கள் எல்லாம் வாங்கித் தந்து, சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சிறுமியை அழைத்துச் சென்றதும், 8 வயது சிறுமி என்று கூட பாராமல், அங்குச் சிறுமியை மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்றும், அவர் மிரட்டி அனுப்பி உள்ளார்.

sexual assault

இதனையடுத்து, அழுதுகொண்டே வீடு திரும்பிய சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். இதனால், அழுதுகொண்டே நடந்ததையெல்லாம் சிறுமி கூறவே, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து  கருணாகரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, 8 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.