தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Bigil Indhuja on Thalapathy Vijay Football Skills

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Bigil Indhuja on Thalapathy Vijay Football Skills

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Bigil Indhuja on Thalapathy Vijay Football Skills

இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்துஜா இந்த படம் குறித்த சுவாரசிய அனுபவங்களை பிரத்யேகமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்

Bigil Indhuja on Thalapathy Vijay Football Skills

இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தில் தளபதி படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் மோதிரம் பரிசளித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஃ புட்பால் விளையாடியதை பார்த்து நிஜ ஃ புட்பால் பிலேயேர்களும் பிரமித்து போனார்கள் எப்படி இவர் இவ்வளவு வேகமாக கற்றுக்கொண்டார் என்று.அவருடன் வேலைபார்த்து ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.